
சென்னை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ. ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை செயலர் க. பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் இந்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அரசுப் பேருந்து நடத்துநருக்கான தகுதிகள் கடந்த 1998-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்து, இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் என்பது 150 செ.மீ. என நிர்ணயிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அலுவலகம் கேட்டுககொண்டது.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீ. என்றும், பெண் நடத்துநருக்கான உயரம் 150 செ.மீ. என்றும், இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச உடல் எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுக்கிறது என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம், பெண் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிப்போர், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது 150 செ.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. நடத்துநர் பணிக்கு தேர்வாக குறைந்தபட்ச உடல் எடை 45 கிலோ இருக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதன் மூலம், கருணை அடிப்படையில் ஏராளமான பெண்களுக்கு இப்பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்று தொழிற்சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.