உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி நீக்கம்! ஷஜீவனா ஐஏஎஸ் நியமனம்!பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை சென்ட்ரல் கோபுர கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

சென்ட்ரல் கோபுரக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :

சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுரக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

சென்னை சென்ட்ரல் பகுதியை ஒரு உலகத்தரம் வாய்ந்த அடையாளமாக மேம்படுத்தும் நோக்கில், மத்திய சதுக்கத் திட்ட கட்டுமானப் பணிகளை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், புறநகர் சென்ட்ரல் இரயில் முனையம், பூங்கா இரயில் நிலையம் (புறநகர்), பூங்கா நகர் இரயில் நிலையம் (துரித இரயில் போக்குவரத்து அமைப்பு). சென்ட்ரல் மெட்ரோ நிலையம், ரிப்பன் மாளிகை (பெருநகர சென்னை மாநகராட்சி), தென்னக இரயில்வே தலைமையகம் மற்றும்

இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கிடையே பொதுமக்கள் எளிதில் சென்று வருவதற்கு ஏதுவாக, மத்திய சதுக்கம் ஒரு முத்தாய்ப்பான பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. சென்ட்ரல் கோபுரக் கட்டடம் சென்னை சென்ட்ரல் பகுதியில் பன்முகப் போக்குவரத்து ஒருங்கிணைப்பினை மேலும் சிறப்பூட்டும் வகையில் முத்தாய்ப்பு திட்டமாக சென்னை சென்ட்ரல் கோபுரத் திட்டத்தை செயல்படுத்தி, இப்பகுதியில் அமையப் பெற்றுள்ள பன்முகப் போக்குவரத்து அமைப்புகளை முழுமையாகப்

பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் பல்வேறுபட்ட பயன்பாடுகளினால் இவ்விடம் ஓர் அடையாள சின்னமாக மாற்றிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் 50:50 என்கிற சமவீத பங்களிப்புடன், கூட்டு முயற்சி அடிப்படையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டுமான பணிகளைச் செயல்படுத்தவுள்ளது.

சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டடம் 14,280 சதுர மீட்டர் நிலப்பரப்பளவில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 4 அடித்தளங்களுடன், தற்போது கட்டப்படவுள்ள தரைத்தளம் மற்றும் 27 அடுக்குமாடிகளுடன் (120 மீட்டர் உயரம்) அமைக்கப்படவுள்ளது. தரைதளம் முதல் 4 தளங்கள் வரை சில்லரை மற்றும் வணிக பயன்பாட்டிற்காகவும், 5 முதல் 24 தளங்கள் வரை அலுவலகங்களுக்கான பயன்பாட்டிற்கும், 25-வது தளம் சேவைகளுக்காகவும், 26 மற்றும் 27-வது தளங்கள் வணிக நோக்கத்திற்காகவும் கட்டமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச்

செயலாளர் டாக்டர் கே. கோபால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.