எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அப்பா செயலியை வெளியிட்டார்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- DIPR
Updated On :22 பிப்ரவரி 2025, 7:15 am

DIN

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

கடலூர் மாவட்டம், திருப்பயரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில், தமிழ்நாட்டின் 132 அரசுப் பள்ளிகளில் 177.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் – ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்தார்.

மேலும், 234/77 (ஒருமைக்கண்) செயலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் “அப்பா” எனும் செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்து, தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாட்டுச் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். வந்ததும், பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கியதோடு, தான் வரும் வழிகளில் எல்லாம் மக்களை சந்தித்தேன். எனவேதான் தாமதமாகிவிட்டது என்று, விழாவில் பங்கேற்றவர்களிடம், விழாவுக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பேசுகையில், அம்மா, அப்பா, ஆசிரியரை தெய்வம் என்று கூறுவர். கல்வித் துறையில் உலகத் தர சாதனைகள் படைக்கப்படுகின்ற. தமிழ்நாடு அரசு செய்வது அனைத்துமே சாதனைதான். ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்க்கிறோம் என்று ஸ்டாலின் கூறினார்.

இவ்விழாவில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் செயலியான அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர், பெற்றோர்களே, நான் உங்களில் ஒருவன், அதற்கேற்ற கடமைகளைச் செய்கிறவன். பள்ளிக் கல்வித் துறையை இந்தியாவின் 2வது இடத்துக்கு உயர்த்தியவர் அன்பில் மகேஸ் என்றார்.

அப்பா செயலி

“தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் - அப்பா” எனும் செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி சமீபத்திய தளம் மற்றும் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இச்செயலி பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது. அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46,000 அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12,000 தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.