தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஹிந்தி அல்ல; 3வது மொழியாக எதுவேண்டுமானாலும் இருக்கலாம்: அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

News image
அண்ணாமலை - படம் | யூடியூப்
Updated On :25 பிப்ரவரி 2025, 7:05 pm

DIN

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத நிலையில் முதல்வர் ஏன் கபட நாடகமாடுகிறார்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டுவருவது எங்கள் கடமை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எங்கள் எதிரி என திமுக கூறுகிறது. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வதைப் போன்று முதல்வர் பேசுகிறார்.

தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதிப்பு என யார் சொன்னது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்று இது குறித்து கேள்வி எழுப்பும்.

பெயிண்ட் எடுத்துச் செல்லும் திமுகவினர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.

மூன்று மொழிகள் படித்த சாதனையாளர்கள் யாரும் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? திமுக குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மூன்று மொழிகள் படிப்பதும், தமிழ்நாட்டு மக்கள் இரு மொழி படிக்க வேண்டும் என்பதே திமுகவின் மொழிப் போராட்டம்.

பள்ளிக் கூடத்தில் மூன்றாவது மொழி என்ன என்பதை ஆசிரியர் பெற்றோர் கழகம் முடிவு செய்யும். ஒரு மாநில முதல்வர் முடிவு செய்ய முடியாது.

மூன்றாவது மொழியாக கன்னடம் இருக்கலாம். மலையாளம் இருக்கலாம். அது அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்தது. ஹிந்திதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இருமொழிக் கொள்கையால்தான் மாநிலம் முன்னேறியது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.