பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

News image

நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்.

Updated On :5 ஜனவரி 2025, 9:22 am

DIN

பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

இந்த நேரத்தில் பல்லாவரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர் அவர்களாவே ரயிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.