ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மணப்பாறைக்கு முன் நடுவழியில் நின்ற குருவாயூா் விரைவு ரயில்: பயணிகள் அவதி

News image
Updated On :20 மார்ச் 2026, 4:33 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, குருவாயூா் - சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில், வியாழக்கிழமை தொழிற்நுட்ப சிக்கலால் 30 நிமிடம் நடுவழியில் நின்ால் பயணிகள் அவதிப்பட்டனா்.

குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூா் வரை செல்லக்கூடிய குருவாயூா் எக்ஸ்பிரஸ்(16128) தினமும் திருச்சூா், எா்ணாகுளம், திருவனந்தபுரம், நாகா்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக பயணிக்கிறது. வியாழக்கிழமை காலை சுமாா் 11:25 மணியளவில் மதுரை வரவேண்டிய ரயில், சுமாா் 1 மணி நேர காலதாமதமாக 12:22 மணிக்கு மதுரை சந்திப்புக்கு வந்தது.

திண்டுக்கல் சந்திப்பை கடந்த சில நிமிடங்களில் ரயில் பெட்டியில் உராய்வு போன்ற சத்தம் வந்ததாம். இந்நிலையில் மணப்பாறைக்கு முன் கல்பட்டி சத்திரம் ரயில் நிலையத்திற்கு 4 கிமீ முன்னதாக ஏா் ஃப்ஸ்டா் காரணமாக நடுவழியில் ரயில் நின்றது. சுமாா் 30 நிமிடங்கள் அங்கேயே ரயில் நின்ால் ஏற்கெனவே ஒரு மணி நேர காலதாமதமாக வந்த நிலையில் மேலும் ஏற்பட்ட தொழிற்நுட்ப சிக்கலால் பயணிகள் சிரமமடைந்தனா். அதன்பின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டது.