மழை அறிவிப்பு
மழை அறிவிப்பு

என்ன, பொங்கலுக்கு மழை பெய்யுமா?

பொங்கல் அன்று சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யுமா?
Published on

கடல் பரப்பில் நிலவும் மேலடுக்கு சுழற்சி ஜனவரி 12 - 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைப்பொழிவை கொடுக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மழை மற்றும் வானிலை குறித்து எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பல்வேறு தகவல்களை ஆழமாகவும் எளிமையாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாக அளித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்துக்கு ஜனவரி 12 - 16ஆம் தேதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைப் பெய்யும். மாஞ்சோலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாள்களில் மழை பெய்வது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். கடலோரப் பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது.

ஆனால், ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மாஞ்சோலை மற்றும் குற்றாலம் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கவும் வாய்ப்புள்ளது. மற்ற நாள்களில் பிரச்னை இருக்காது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக முதல் மழையானது ஜனவரி 12 -16ஆம் தேதிகளில் பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை மழை பெய்யும்.

இரண்டாவது மழையானது 19 முதல் 21ஆம் தேதி வரை பெய்யலாம். இந்த நாள்களில் டெல்டா முதல் தெற்கு மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அவ்வளவு மழை பெய்யாது.

நமக்கு வெகு தொலைவில் ஒரு காற்றழுத்த தாழ்வு இருக்கிறது. தற்போதைக்கு அது பற்றி எதுவும் சொல்ல இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com