47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள், காளையர்கள்!

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகள்ளை, காளையர்கள் அடக்க முயன்று வருகிறார்கள்.

News image
ஜல்லிக்கட்டுப் போட்டி
Updated On :16 ஜனவரி 2025, 5:04 am

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸவர்யா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தொடர்ந்து, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.‌மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்க முயன்று வருகின்றனர்.

போட்டியில், புதுகை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

பல்வேறு குழுக்களாக 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

காளைகள் முட்டி காயமடைவோருக்கு அங்கு தயார் நிலையில் உள்ள மருததுவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் போட்டியை காண வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.