கோப்புப்படம்.
கோப்புப்படம்.

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடையே இயக்கப்படும் என்றும் அதுவும் 12 பெட்டிகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் சென்னையை நோக்கி திரும்பி வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளக்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் ஊர்ந்தபடியே வாகனங்கள் நகர்ந்து சென்றன.

இந்த நிலையில் சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில் இச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் மாற்றுவழிகளை கையாள்வது சிறந்ததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com