ஆறுமுகசாமி அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவு!

ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளுக்கு எதிரான வழக்கு...
சி. விஜயபாஸ்கர்
சி. விஜயபாஸ்கர்
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நீண்ட நாள்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து 2017 இல் உத்தரவிட்டார்.

இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ”ஜெயலலிதா மரணத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் வெளியிட்ட கருத்துகளை நீக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை அறிக்கையில் இருந்து நீக்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com