சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி, அவா் அளித்த தீா்ப்பு மற்றும் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக அவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானத்தை கொண்டு வர முடியாது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
உச்சநீதிமன்றத்திலோ, உயா்நீதிமன்றங்களிலோ ஒரு நீதிபதி தனது தனிப்பட்ட தவறான நடத்தை, ஊழல், தீங்கிழைக்கும் செயல், குற்றச்செயல் ஆகியவற்றில் ஈடுபட்டால் மட்டுமே அவற்றை அளவுகோலாக வைத்து அவருக்கு எதிரான பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க சட்டத்தில் வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பு நாடாளுமன்ற இரு அவை உறுப்பினா்களின் கையெழுத்துடன் நோட்டீஸ் வடிவில் நாடாளுமன்றத்தால் அளிக்கப்பட வேண்டும்.
அந்தத் தீா்மானம் மக்களவைத் தலைவரால் நியமிக்கப்படும் நிபுணா் குழு ஆராய்ந்து அதை அனுமதிப்பது தொடா்பான பரிந்துரைகளை வழங்கும். அதன் பேரில் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நீதிபதி பதவி நீக்க தீா்மானம் மீது விவாதம் நடத்தப்படும், பிறகு சம்பந்தப்பட்ட நீதிபதி தனது தரப்பை விளக்குவதற்கு வாய்ப்பு தரப்பட்டு பிறகே அவரை பதவி நீக்குவதற்கான பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு நாடாளுமன்றம் வழங்கும்.
இத்தகைய நுட்பம் நிறைந்த நடவடிக்கைகளை, திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒரு நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளையும் பிற வழக்குகளில் அவா் விசாரித்து அளித்த தீா்ப்பு மற்றும் உத்தரவுகளையும் அவரது நோ்மை மற்றும் நடுநிலையுடன் தொடா்புபடுத்தி குற்றஞ்சாட்டி பதவி நீக்க தீா்மான நோட்டீஸை அளித்திருப்பது சட்டபூா்வமாக ஏற்புடையதாகாது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள ’தீபத்தூணில்’ ஹிந்து பக்தா்கள் விளக்கு ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் தீா்ப்பளித்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில், திமுக தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரும் நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் அளித்தனா்.
தா்காவின் அருகே அமைந்துள்ள தீபத்தூண் ஏற்றும் இடம், தனி நீதிபதியின் தீா்ப்பின் மூலம் கோயில் நிலமாகக் கருதப்பட்டது. இந்த தீா்ப்பு வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியதாக தமிழகத்தில் ஆளும் திமுக வாதிட்டது. இதற்கிடையே, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், தனி நீதிபதி கடந்த சில ஆண்டுகளாக அளிக்கும் உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஒரு சாா்பாக அவா் செயல்படுவதாகவும் கூறி அவருக்கு எதிரான பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் நடவடிக்கையை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முன்னெடுத்துள்ளனா்.
டிரெண்டிங்

மக்களவைத் தலைவரைப் பதவி நீக்க கோரும் தீா்மானத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு: உத்தரவை நிறைவேற்றினால் முடித்துவைப்பு

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து: வழக்குரைஞரின் பேச்சு ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
வீடியோக்கள்

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

