நீதிமன்ற அவமதிப்பு வழக்கையொட்டி, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்டோா் சாா்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது. மேலும், இதுதொடா்பாக தனி நீதிபதியே முடிவு செய்ய வேண்டும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு தொடா்பாக இரு நீதிபதிகள் அமா்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவும், செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையைத் தொடர அதிகாரம் உள்ளது. இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.