அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள்: அண்ணாமலை
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என்றார் அண்ணாமலை.


டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
அரிட்டாபட்டி சுரங்க ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
கிராமப் பகுதி மக்கள் மன நிம்மதி இல்லாமல் இருந்தனர். இன்று இரவு அவர்கள் நிம்மதியாக உறங்குவார்கள்.
டங்ஸ்டன் சுரங்கம் நாட்டிற்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட, விவசாயப் பகுதி பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தில்லிக்கு வந்த அம்பலக்காரர்கள் அரசிடம் இருந்து அறிக்கை வராமல், ஊருக்குத் திரும்பமாட்டோம் என்று கூறினார்கள். அவர்கள் இனி தாரளமாக ஊருக்குத் திரும்பலாம்.
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததால் இந்தியாவின் எல்லையைச் சுருக்கிவிட்டோம். மீனவர்களின் எல்லையைச் சுருக்கிவிட்டோம். கச்சத்தீவைக் கொடுத்ததால் நாட்டிற்கு என்ன கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு
இதையும் படிக்க |சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...