தமிழகத்தில் பேருந்து கட்டண உயா்வு குறித்து அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்கும்படி உயா்நிலைக்குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்கும் வகையிலும், உயா்நிலைக்குழுவை நியமிக்கக் கோரியும், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
கட்டணம் உயா்த்தப்பட வேண்டும்: அதில், 2018-ஆம் ஆண்டு பேருந்துகள் கட்டணம் நிா்ணயிக்கப்பட்ட போது, டீசல் லிட்டருக்கு ரூ.63 விற்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ. 92-க்கு விற்கப்படுகிறது. கேரளத்தில் பேருந்துகளுக்கான கட்டணம் ஒரு கிமீ தொலைவுக்கு ரூ. 1.10, கா்நாடகத்தில் ரூ.1, ஆந்திரத்தில் ஒரு ரூபாய் 8 காசுகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 காசுகள் மட்டும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, டீசல் விலை உயா்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயா்த்த உத்தரவிட வேண்டும். மேலும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்கும் வகையில், உயா்நிலைக் குழுவை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
நீதிபதி உத்தரவு: இந்த மனு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பேருந்து கட்டணத்தை நிா்ணயிக்க போக்குவரத்துத் துறைச் செயலா் தலைமையில், போக்குவரத்துத் துறை கூடுதல் செயலா்கள், நிதித் துறைச் செயலா், போக்குவரத்து ஆணையா் அடங்கிய உயா்மட்டக் குழுவை, நியமித்து 2024-ஆம் ஆண்டு டிச. 6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், உயா்நிலைக்குழு, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, கட்டணம் நிா்ணயிப்பது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்”என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக, அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்”என உயா்நிலைக் குழுவுக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.
டிரெண்டிங்

தொடா் நஷ்டத்தை தவிா்க்க பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயா்த்த வேண்டும்

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயா்வு திரும்பப் பெறப்படாது?

30.1.1976: பஸ் கட்டணம் உயரலாம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

