சென்னை: வானின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சரக்கு விமானம், 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம் ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து 124 டன் சரக்குகளுடன் சென்னை சர்வதேச விமான நிலைய சரக்குகள் கையாளும் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.
இதையும் படிக்க.. முதல் ஒரு வாரத்தில் டொனால்ட் டிரம்ப் சொன்ன பொய்கள்!
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ரக சரக்கு விமானம் சென்னையில் முதல் முறையாக வந்து தரை இறங்கியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உடனடியாக சரக்கக பகுதி ஊழியர்கள் விமானத்தில் வந்த சரக்குகளை இறக்கியதோடு சென்னையில் இருந்து துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகளையும் துரிதமாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த விமானம் சென்னையில் இருந்து துபாய் வழியாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த சரக்கு விமானம் ஒரே நேரத்தில் சுமார் 125 டன்களை கையாளக்கூடியது. இது பயணிகள் விமானமாகவும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்களாக இயங்கும் போது, ஒரே நேரத்தில் 660 பேர் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையம் சரக்குகளை திறம்பட கையாளுவதில் தற்போது உலக அளவில் சர்வதேச புகழ்பெற்ற சரக்கக விமான நிலையமாக செயல்படுவதால் வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய ரக சரக்கு விமானங்கள் சென்னைக்கு வந்து செல்கின்றன.
இது சர்வதேச சரக்கு விமான போக்குவரத்தில் சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

