DPI
பள்ளிக்கல்வித் துறைDIN

மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்

புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நோக்கில், அவா்களுக்கு வங்கிக் கணக்குகளை அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக தொடங்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலும், இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில், நிலுவையில் உள்ள அனைத்து பட்டியலையும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு வழங்க வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரித்து வழங்க தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com