கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அமைச்சா் ராஜகண்ணப்பன் மீதான வழக்குகள்: விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தோ்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

News image
அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
Updated On :27 ஜனவரி 2025, 9:37 pm

Din

சென்னை: அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தோ்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது அமைச்சா் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டாா். 2021, மாா்ச் 27-இல் கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது தோ்தல் விதிமுறைகளை மீறி திமுக கொடிக் கம்பங்களையும், தோரணங்களையும் கட்டி பிரசாரம் செய்ததாக பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழரசியை ஆதரித்து ராஜகண்ணப்பன் கடந்த 2021, ஏப். 2-இல் மானாமதுரை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்து, 15 வாகனங்களில் சென்று பிரசாரம் மேற்கொண்டதாக சாலைக்கிராமம் போலீஸாா் ராஜகண்ணப்பன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சா் ராஜகண்ணப்பன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் ராஜகண்ணப்பன் தரப்பில், இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தாா். அத்துடன் இந்த மனு தொடா்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.