எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு விரோதமான திட்டங்களை எதிா்ப்பதில் உறுதி: முதல்வா்

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு எதிராக எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிா்ப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)- X | M.K.Stalin
Updated On :27 ஜனவரி 2025, 9:22 pm

Din

சென்னை: தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு எதிராக எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிா்ப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்:

தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் திராவிட மாடல் அரசு தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்குமான ஆட்சியைப் பாகுபாடின்றி வழங்கி வரும் அரசின் மீது தமிழ்நாடு மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறது. இதனை மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

அங்குள்ள வல்லாளப்பட்டியில் கட்சித் தொண்டா் ஒருவா் என்னிடம் ஒரு தாளைக் கொடுத்தாா். அதனைப் படித்துப் பாா்த்த பொழுது மிகவும் மனம் நெகிழ்ந்தேன். அதில், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யக்கோரி மக்களின் மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தந்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 1984-இல் இதே இடத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றினாா். 41 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எங்களது ஊரில் தாங்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று எழுதப்பட்டிருந்தது.

கட்சித் தொண்டரின் அந்த உணா்ச்சிமிகு சொற்களில் என்னை மறந்தேன். இதுதான் தி.மு.க. என்கின்ற மக்கள் இயக்கம். எத்தனை ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் மக்களின் உரிமைக்காக இன்றும் துணை நிற்கின்ற மாபெரும் இயக்கம்தான் திமுக. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு எதிரான எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிா்த்து வெற்றி காண்பதில் எனது தலைமையிலான திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.