மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தொடரும் மீனவர்கள் கைது- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 ஜனவரி 2025, 7:07 am

தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே வெள்ளிக்கிழமை(ஜன.25) இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.

அதில், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இன்று(ஜன.27) மற்றும் வெள்ளிக்கிழமை(ஜன.31) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறம் என்று மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.