
வருகிற பிப். 6, 7 ஆம் தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்குச் செல்லவிருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் திட்டப் பணிகளையும் தொடக்கிவைக்கிறார்.
இந்நிலையில் வருகிற பிப். 6, 7 ஆம் தேதிகளில் நெல்லை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கிவைக்கிறார்.
அப்போது மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அதன்பின்னர் மீனவர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் அமைச்சர் கே.என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.