அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்.

News image
முதல்வர் ரங்கசாமி
Updated On :28 ஜனவரி 2025, 8:47 am

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்ற 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நேற்றிரவு காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மற்றும் தமிழக மீனவர்கள் 7 பேர் என 13 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும் அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.