அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராகவுள்ள நிர்மல் குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியின் ஆலோசகர் அல்லது மாநில துணைப் பதவியும், தேர்தல் யுத்திகளை வகுக்கும் முக்கியமான பொறுப்பும் அவருக்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் முக்கிய பொறுப்பா?
இந்த நிலையில், அதிமுகவின் ஐடி பிரிவின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் நிர்மல் குமாரும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரை தொடர்ந்து, நாம் தமிழர் மற்றும் அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா

ஆ. ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | DMK | TVK

”பதவிக்கு ஆசைப்படுபவர் அல்ல திருமா!” அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



