34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

கோவையின் சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம், சேலம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூரில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் பர்கூர் ஆகிய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தேனியின் பழனிசெட்டிபட்டி, மேலசொக்கநாதபுரம், கன்னியாகுமரியின் குலசேகரம், இடிகரை, கோவை செட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர்,

திண்டுக்கல் அகரம், செவுகம்பட்டி, தென்காசி மேலகரம், ராமநாதபுரம் முதுகுளத்தூர் உள்ளிட்டப் பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி வெள்ளிமலை, புத்தாளம், மண்டைக்காடு, ஆத்தூர், கோவையின் ஆலந்துைறை, ஈரோட்டின் எலாத்தூர், தேனியின் புத்திபுரம், சேலத்தின் நங்கவல்லி உள்ளிட்டப் பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!

Summary

Tamil Nadu government has ordered the upgrading of 34 town panchayats in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com