
ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் திருப்பூர் மாவட்டச் செயலர் ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விடியோ வெளியாகியுள்ளது.
திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் ’ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கிவைத்து, வீடுவீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜூலை 3) மக்களை சந்தித்தார்.
அதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலருடன் முதல்வர் ஸ்டாலின் விடியோ அழைப்பு மூலம் கலந்துரையாடினார். அவரது அழைப்பின் போது 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அவருடன் இருந்தனர்.
அந்த விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தார். நீங்க எத்தனை வீடு சென்றீர்கள். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் வரவேற்பு எவ்வாறு இருக்கிறது எனக் கேட்டறிந்தார்.
மேலும், அழைபேசி எண் கேட்டால் தருகிறார்களா? ஒரே அடியாக வேகமாக பிரசார இயக்கத்தில் ஈடுபடவேண்டாம். பொறுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டால் போதும் எனத் தெரிவித்தார்.
எல்லாருடைய வீட்டில் காபி எல்லாம் தராங்களா? எனக் கேட்டறிந்தார். மேலும், அவர்கள் சாப்பிடவே கூப்பிட்டார்கள் என மாவட்டச் செயலர் கூற, “தெரிந்திருந்தால் நானே வந்திருப்பேனே” என நகைப்புடன் பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதையும் படிக்க... தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.