இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு...
Edapadi palanisamy, nainar nagendran
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ், கோவையில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.

ஜூலை 7 அம் தேதி கோவை புறநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழா நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு இபிஎஸ் செல்லும்போது அப்பகுதியின் பாஜக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்கவுள்ளதால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Summary

BJP state president Nainar Nagendran has been invited to attend the inaugural ceremony of AIADMK General Secretary Edappadi Palaniswami's upcoming election campaign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com