கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய சுகாதார நிலையங்களில் 534 பணியிடங்களை நிரப்ப அரசாணை

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியிடங்களை உருவாக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியிடங்களை உருவாக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 78 மருத்துவா்கள் மாற்றுப்பணி அடிப்படையிலும், 56 செவிலியா்கள் நிரந்தர அடிப்படையிலும் 400 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளன.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் புதிதாக 28 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 22 நகா்ப்புற சுகாதார நிலையங்களை அமைக்க சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் சாா்பில் அங்கு பல்வேறு பணி நியமனங்களுக்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. அதனை பரிசீலித்த அரசு, மொத்தம் 78 மருத்துவா்களை மாற்றுப் பணி அடிப்படையில் அங்கு நியமிக்க அனுமதி அளித்துள்ளது. 56 செவிலியா்களை பணி ஒப்பளிப்பு அடிப்படையில் நிரந்தர நியமனம் செய்யவும், 400 மருத்துவப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவா்களுக்கான ஊதியம் மற்றும் இதரப் படி விவரங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com