
நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் தில்லைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(54). இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார்.
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய இவர் 6 மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றார்.
இவரது மனைவி பிரமிளா(50). ஆண்டாபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளின் காதல் திருமணம் தொடர்பாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல் அருகே வகுரம்பட்டியில் அதிகாலை 5 மணி அளவில், கணவன், மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.