சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
SpiceJet flight technical snag
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.

சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி புறப்பட்டது. விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு ஓடுபாதையிலேயே கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் உடனே நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானியின் சாமர்த்தியத்தால் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் விமானத்தில் பயணிக்க இருந்த 70 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

நிலைமை சீரானதும் விமானம் தாமதமாக புறப்படும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தாமதத்தால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Summary

The departure of a SpiceJet flight from Chennai to Thoothukudi has been delayed due to a technical glitch.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com