இபிஎஸ் கூட்டத்தில் மூவரிடம் ரூ. 2 லட்சம் பிக்பாக்கெட்!

எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மூவரிடம் பிக்பாக்கெட்...
EPS
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
1 min read

கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மூவரிடம் ரூ. 2 லட்சம் பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் இருந்து திங்கள்கிழமை காலை தொடங்கினார்.

மேட்டுப்பாளையம் தொகுதி தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்துக்கு வந்து மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர் பேன்ட் பாக்கெட்டை பிளேடால் வெட்டிய மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர்.

அதேபோல், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ. 2,500 -ம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேட்டுபாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Three people who had attended a meeting attended by AIADMK General Secretary Edappadi Palaniswami were robbed of Rs. 2 lakh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com