சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி!

சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து தொடர்பாக...
சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து.
சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் நாற்று ஏற்றி வந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது.

அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த வாகனம்(கார்) எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உருக்குலைந்த சரக்கு வாகனம்.
உருக்குலைந்த சரக்கு வாகனம்.

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னை சேர்ந்த குமார் (52), துர்கா(32), நிவேனி சூர்யா (3) ஆகிய மூன்று பேரும் செல்லும் வழியில் பலியாகினர்.

இந்த விபத்தில் மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Summary

A tragic incident has occurred on the Thanjavur-Vikkravandi National Highway, where a car crashed into a goods vehicle carrying seedlings coming from the opposite direction, killing four people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com