
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.
ரயில் விபத்து
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில், திராவிட மணி என்பவரின் மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பராக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கருதிய மக்கள் அவரை சரமாரியதாகத் தாக்கினர்.
கேட் கீப்பர் சிறையில் அடைப்பு
இதில், அவர் பலத்த காயமடைந்தார். காவல்துறையினர் அவரை மீட்டு கைது செய்த நிலையில், ரயில்வே மேலாளர், பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், வருகிற 22 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க : டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.