தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

News image
Updated On :10 ஜூலை 2025, 4:39 am IST

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது.

பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வகையான சான்றிதழ் படிப்புகளுக்கும், இருவேறு மருத்துவ ஆவணப் படிப்புகளுக்கும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக புதன்கிழமை தொடங்கியது. வரும் 23-ஆம் தேதி வரை தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இரு ஆண்டுகள், ஓராண்டு, ஆறு மாத கால படிப்புகளாக பயிற்றுவிக்கப்படும் அப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேடு, கூடுதல் விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.