இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சென்னை, புறநகரில் இன்று பலத்த மழை பெய்யும்!

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு.

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :10 ஜூலை 2025, 11:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று(ஜூலை 10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் பிரதீப் ஜான். மழை குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

கடல் காற்றானது, சென்னை நகரத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை எடுத்துகொண்டு நகர்கிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று முன்நாள்(ஜூலை 8) காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னையில் பரவலாக மழை பெய்தது. நேற்று(ஜூலை 9) செங்கல்பட்டில் மட்டும் மழை பெய்தது.

ஆனால், இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில நாள்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வந்த நிலையில், இன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

summary

Pradeep John, known as the Tamil Nadu Weatherman, has said that there is a possibility of heavy rain in Chennai and its suburbs today (July 10).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.