
அழகுமுத்துக் கோன் தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த முதலாவது விடுதலைப் போராளி மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எக்ஸ் தளப் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் மரியாதை செலுத்தி பதிவிட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளப் பதிவில், “வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன், தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.