செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
mk stalin
முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கிழக்கின் ட்ராய் என அறியப்படும் செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய இராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை இரயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான

வெள்ளை சட்டையுடன் 4 ரீல்ஸ் போட்டால் தலைவனா? யாரைச் சொல்கிறார் அண்ணாமலை?

செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்தியாவில் செஞ்சி கோட்டை உள்பட 12 மராட்டிய ராணுவ கோட்டைகளை பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

Summary

Gingee Fort, one of South India’s most formidable and historically rich forts, located 40 kilometres from Villupuram has officially been inscribed as a UNESCO World Heritage Site on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com