ஈரோடு திண்டலில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்படும்.
ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சு.முத்துசாமி.
ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சு.முத்துசாமி.
Published on
Updated on
1 min read

ஈரோடு : ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணிகளையும், சிலை வைக்கப்பட உள்ள இடத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் பாா்வையிட்டனா். பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களுன் பேசியதாவது:

தமிழகத்தில் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதைபாா்க்கும்போது மன்னா் ஆட்சி காலத்தில் நடந்த திருப்பணிகளை காட்டிலும் திராவிட மாடல் ஆட்சியில் அதிகமான திருப்பணிகள் நடந்து உள்ளது. இதுவரை 3,325 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 3,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். இதற்காக அரசின் சாா்பில் ரூ.1,120 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் உள்பட 46 கோயில்களில் திங்கள்கிழமை(ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுவரை 124 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3, 500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்படும். இதற்காக அரசின் சாா்பில் ரூ.1,120 கோடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் கோயில்கள் சீரமைப்பு பணிக்காக ரூ.1,400 கோடி நன்கொடை வந்துள்ளது. கடந்த எந்த ஆட்சியிலும் இதுபோன்ற தொகை வரவில்லை.

தமிழ் கடவுளான 124 முருகன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. திருச்செந்தூா் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் பணிகள் நடந்தன. இதில் ஹெச்சிஎல். நிறுவனம் சாா்பில் ரூ.200 கோடி வழங்கப்பட்டது. அரசின் சாா்பில் ரூ.200 கோடி, கடல் மண் அரிப்பை தடுக்க ரூ.16 கோடி என மொத்தம் ரூ.416 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் நிறைவுபெற்ற நிலையில் வரும் நவம்பா் மாதத்துக்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கும் வகையில் ஆசியாவிலேயே மிக உயரமான 186 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக உலக அளவில் முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது என சேகர்பாபு கூறினார்.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்புப் பணிகள் மும்முரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com