சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில நாள்களாகவே மாலை நேரங்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், இன்று புறநகர் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...