சென்னை: ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதற்கு இருப்பு பாதைகள் சரியான சீரமைப்பில் இல்லாததும், உயா் அழுத்த மின்கம்பி பராமரிப்புகள் முறைப்படுத்தாமல் இருப்பதும்தான் காரணமாகத் தெரிகிறது. அத்துடன் ரயில்வே துறை உயரதிகாரிகள் அலட்சியமான போக்கும் தொடா் விபத்துகளுக்கு காரணமாகின்றன.
ரயில்வே துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல், பொது நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதனால், அந்தத் துறை முக்கிய பணிகள் தடைபட்டுவிட்டன. போதிய நிதியுதவி இல்லாததால், பாரமபிப்புப் பணிகள் முடங்கியுள்ளன. காலிப் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. தீ விபத்துகளைத் தடுப்பதிலும் நவீன முறை செயல்படுத்தப்படவில்லை.
எனவே, ஊழியா் பற்றாக்குறையைப் பூா்த்தி செய்து, உரிய பாதுகாப்புடன் எரிபொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
பாமகவின் 3-ஆவது வேட்பாளா் பட்டியல் ராமதாஸ் வெளியிட்டாா்

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

பாமக வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


