யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை

News image
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2025, 6:46 pm

Din

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா்.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், மாவட்டச் செயலா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஆலோசனை நடத்த மாவட்டச் செயலா்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.