
கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவியை கூட்டு் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர், தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாடினார்.
அப்போது, அங்கு வந்த 7 பேர், மாணவியுடன் இருந்த மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றனர்.
இதுதொடா்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல், பிரகாஷ், காா்த்திகேயன், நாராயண மூா்த்தி, மணிகண்டன், பப்ஸ் காா்த்திக், ஆட்டோ மணிகண்டன் ஆகிய 7 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பகவதியம்மாள் அளித்த தீர்ப்பில், கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்றும், குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியும் இன்று (ஜூலை 18) உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.