
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார்.
பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சித்தும் அவர் பேட்டி அளித்திருந்தார்.
பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் பேசியிருந்தார். இந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இன்று இணைந்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல்ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அதிமுக தனது கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்.
அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் போட்டி போடுவதே பாஜவின் திட்டம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற என் மனதின் ஆதங்கத்தை தலைமைக்கு தெரிவித்தேன். பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர்.
இதனிடையே அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
Anwar Raja joined the DMK on Monday at the Anna Arivalayam in Chennai in the presence of DMK president and Chief Minister Stalin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.