ஆக. 2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்!

சென்னையில் மட்டும் 15 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்களில் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்கள் நடத்தப்படும் என அரசாணையில் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாகவே முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடல் பரிசோதனையில், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதையும் படிக்க | சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தங்கள்! எங்கெங்கு?

Summary

Stalin's welfare scheme to be launched on Aug. 2: Minister M. Subramanian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com