திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

பிரதமர் மோடியை வரவேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
பிரதமர் மோடி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடி - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு விழா இன்று இரவு 8 மணி அளவில் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு 10.35 மணிக்கு மேல் பிரதமா் வருகிறார்.

திருச்சி விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்கிறார்.

தொடர்ந்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரதமர் சாலை வழியாக பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர தங்கும் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி திருச்சி மாநகரம் முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Summary

AIADMK General Secretary Edappadi K. Palaniswami will welcome Prime Minister Narendra Modi at the Trichy airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com