டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

சோழ மன்னா்களுக்கு சிலை: டிடிவி தினகரன் வரவேற்பு!

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
Published on

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததுடன் மாமன்னா்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு மனமாா்ந்த நன்றி.

எதிா்கொண்ட போா்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னா் ராஜராஜ சோழன், இந்திய துணைக் கண்டம் கண்ட மகத்தான பேரரசா்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக்கொண்டாடும் வகையில் சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் டிடிவி தினகரன்.

X
Dinamani
www.dinamani.com