
ரூ. 1,000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடி புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த திலீப்குமார், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் கடன் வாங்கித் தருவதாக திலீப்குமாரிடம் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கான கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முதலில் தரும்படி சீனிவாசன் கேட்டாதாகவும் இதையடுத்து திலீப்குமார், சீனிவாசனுக்கு ரூ. 5 கோடியை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சீனிவாசன், சொன்னபடி, கடனை பெற்றுக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, திலீப்குமார், தில்லி பொருளாதார குற்றப்பிரிவில் சீனிவாசன் மீது புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், 2018 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், மோசடிப் புகார் தொடர்பாக தில்லி காவல் துறையினரால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று(ஜூலை 30) கைது செய்யப்பட்டார்.
சென்னையிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.