
தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி. முனுசாமி இன்று(ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
2026-ல் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கட்சி தொடர்கிறது.
அதிமுகவுக்கான இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் அதிமுகவினரே போட்டியிடுகின்றனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டக் கழக அவைத் தலைவர் தனபால், வழக்குரைஞர் இன்பதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்தார்.
2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கொடுப்பதாக பேசப்பட்டது. இருப்பினும், அதிமுக நேரடியாக அறிவிக்கவில்லை.
இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.