மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

கமல் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பேட்டி.
நயினார் நகேந்திரன் பேட்டி.
நயினார் நகேந்திரன் பேட்டி.
Published on
Updated on
1 min read

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக சென்றது குறித்தான கேள்விக்கு பதிலளிக்க அவர், “அது அவருடைய சொந்த விஷயம், அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறினார். மேலும், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய அவர், எம்பி சீட் கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று கூறுகிறார் என்றும் விமர்சித்தார்.

எந்த மொழி பெரியது என்று கருத்து சொல்ல முடியாது என்றும் அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழியே முக்கியம் எனத் தெரிவித்தார்.

கமல்ஹாசன் மாநிலங்களவை இடத்திற்காக அவரது நிலையில் இருந்து மாறிவிட்டார் எனவும் விமர்சித்தார். தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்து இருக்கிறது என்றும் அது பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்றும் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்கள் எதையும் மாநில அரசு செய்வதில்லை என்றும் மத்திய அரசு திட்டங்களை மறைத்துவிட்டு மக்களுக்கு எதையும் செய்யாத அரசாக மாநில அரசு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com