கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் கொலை

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கஸ்தூரி, பிரகதீஷ்
கொலை செய்யப்பட்ட கஸ்தூரி, பிரகதீஷ்
Published on
Updated on
1 min read

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் உள்பட 2 பேரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் பிரகதீஷ் (20). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் போலீஸார் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் புது கிராமம் செண்பக நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் பாஸ்கரன் மனைவி கஸ்தூரி (48) மற்றும் அவரது சகோதரர் சண்முகசுந்தரம் மகன் செண்பகராஜ் (44) ஆகிய இருவரையும் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர்.

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த செண்பகராஜை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரு கொலை சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பழிக்குப் பழி கொலையாக இருக்கலாம் என்று கோணத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் இரட்டை கொலை நடந்ததையடுத்து வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் பிரகதீஷ் சடலத்தையும் போலீஸார் உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com