மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு!

மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டது பற்றி...
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ஆய்வு
Published on
Updated on
1 min read

மேட்டூர்: தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் வருகிறார்.

மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின் விசையில் இயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகை காரணமாக இன்று காலை மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஆய்வு செய்தார்.

அணையின் வலது கரை, இடது கரை, ஆய்வுச் சுரங்கம் பகுதிகளை பார்வையிட்ட அவர், சுரங்க கால்வாய் புனரமைக்கும் பணி, மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணியையும் பார்வையிட்டார்.

நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஸ்டான்லி, அணை உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் நீர் வரத்து குறித்தும் திறப்பு குறித்தும் பணிகளின் விவரம் குறித்தும் விவரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com