தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

தங்கை கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்: மு.க. ஸ்டாலின்

கனிமொழி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...

Updated On :

இந்தியாவின் தேசிய மொழி குறித்து ஸ்பெயினில் கனிமொழி பேசியதற்கு பெருமைகொள்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் தருவதற்கு மத்திய அரசு சார்பில் எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ஸ்பெயின், ரஷியா நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஸ்பெயினில் அந்த நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசிய கனிமொழி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டதற்கு 'பன்முகத்தன்மை' என்று பதிலளித்துள்ளார். கனிமொழியின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஸ்பெயின் மண்ணில், 'இந்தியாவின் தேசிய மொழி பன்முகத்தன்மை' என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமை மொழியைப் பேசிய கனிமொழியைக் கண்டு பெருமைகொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.